3-2மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை பறங்கி ஆற்றுப்பகுதியல் சட்டவிரோதமான முறையில் புவிச்சரிதவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் போன்று போலி அனுமதிப்பத்திரம் தயாரித்து இரவு,பகலாக மணல் மண் ஏற்றப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடத்த வாரம் போலி அனுமதிப்பத்திரத்தின் மூலம் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போது குறித்த அனுமதிப்பத்திரம் போலியானது என அடையாளப்படுத்திய போதும் இது வரை இலுப்பைக்கடவை பொலிஸார் எந்த வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அப்பகுதி கிராம அலுவலகர்,பிரதேச செயலாளர்,பிரதேச சபையினர்,பொலிஸார்,வனவிலங்குகள் திணைக்களம் ஆகியோர் இலஞ்சம் பெற்றுக்கொண்டு குறித்த சட்டவிரோத மண் அகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே குறித்த நிலை அமதடருமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தில் கணிய வளம் அழிவதுடன்,உப்பு நீர் ஊற்றெடுக்கும் அபாயம் ஏற்படும் என சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே போலி அனுமதிப்பத்திரம் தயாரித்து சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை உடன் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment