625.500.560.350.160.300.053.800.900.160.9032ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் அவருக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான விளையாட்டு விழாவில் 04வது நாளாக இன்றும் போட்டிகள் இடம்பெற்றன.

இதன் போது யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3.80 மீற்றர் தூரம் பாய்ந்து முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, முதன் முறையாக கோலூன்றிப் பாய்தலில் கலந்து கொண்ட அவர் தங்க பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment