625.500.560.350.160.300.053.800.900.160.90நொச்சியாகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு விசித்திரமான அனுபவம் ஒன்று இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த பாரிய முதலை ஒன்றினால் அதிகாலை வேளையில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த முதலையை பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு பொலிஸார் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் எவ்வளவு முயற்சித்தும் அந்த முதலையை பொலிஸாரால் வெளியேற்ற முடியாத நிலையில் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவின் உதவி நாடப்பட்டுள்ளது.

இறுதியில் முதலை வெளியேற்ற முடியாமல் பொலிஸ் அதிகாரிகள் முதலை தொடர்பில் வில்பத்து வனவிலங்கு அலுவலகத்தில் அறிவித்துள்ளனர்.

வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு முதலையை பிடித்துள்ளனர். அதன் பின்னர் முதலையை வில்பத்து காட்டில் உள்ள ஏரி ஒன்றில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

comments, Login your facebook to comment