image-0-02-06-1c59b4d28aa9d4441ca8435023ca28857435fbac71c4872f8bad4ba974d5e607-V-1024x768தேசிய ரீதியில் 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றெடுத்த மாணவன் ஒட்டிசுட்டான் மகாவித்தியாலய மாணவன் பு.ஜெனந்தன் உட்பட தேசிய விளையாட்டுப்போட்டியில் பங்கெடுத்த மாணவர்களுக்கான கௌரவம் வழங்கும் நிகழ்வு  பாடசாலையில் நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட தடகளப் போட்டியில் முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் மகாவித்தியாலய மாணவன் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.

இம் மாணவனையும், தேசிய ம்டட போட்டியில் பங்கெடுத்த மாணவர்களையும் கௌரவிக்கும் முகமாக பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் கமநல திணைக்களத்திற்கு முன்பாக மாணவர்களது விசேட பான்ட் வாத்திய அணிவகுப்புடன் சாதனை மாணவர்கள் பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் திரு யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக் கௌரவிப்பு விழாவிற்கு பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

அகவணக்கத்தினைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழ் ஆசிரியர் வே.முல்லைத்தீபன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்க வரவேற்புரையினை இந்துநாகரிக ஆசிரியர் ரதிக்குமார் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து தலைமையுரையினை பாடசாலையின் முதல்வர் நிகழ்த்த ஆசிரியர் சார்பில் வாழ்த்துரையை தேவகி ஆசிரியை வழங்கினார்.

தொடர்ந்து சாதனை மாணவன் ஜெனந்தன் அவர்களுக்கு பாராட்டி பரிசளிப்பு இடம்பெற்றது. முன்னாள் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலர் வேதவனம் அவர்களின் உரைக்குப் பின்னரான நன்றியுரையினை பிரதி அதிபர் திருமதி நிர்மலா கந்தசாமி வழங்கியதுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

இதன்போது பாடசாலை சமூகத்தினர் ஒன்று திரண்டு குறித்த மாணவர்களைப் பாராட்டி கௌரவித்தனர்.image-0-02-06-3fdc7e5345a9e9787989b83334646761d81f29551f9fcd4b7bbc5431c98dd427-V-1024x768image-0-02-06-aa11c940b11cd862145bbf8c85e5048cb1391f2275c782b26596d72db6fedc2c-V (1) image-0-02-06-1c59b4d28aa9d4441ca8435023ca28857435fbac71c4872f8bad4ba974d5e607-V-1024x768 image-0-02-06-3e2d15688da1fa2654e3847393909d0785742c0fadc76c9a45125822168699ac-V-1024x768 image-0-02-06-9592f970f6c317b8899b4fe806b18624d02b30046df203769a904d05531390b2-V-1024x768 image-0-02-06-9657b18582af0607a3ada7400f869d777185dc773a48766babeab5eb8d66866d-V-1024x768

Comments

comments, Login your facebook to comment