625.117.560.350.160.300.053.800.210.160.90-62யாழ்ப்பாணம் கீரிமலை பிரபல பாடசாலையில் 15 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.கீரிமலை நகுலேஸ்வரா வீதியை சேர்ந்த அரியசேகரம் தர்ஷிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

குறித்த சிறுமி மனவிரக்தி காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சிறுமி வீட்டின் அறை ஒன்றில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், சிறுமியின் சடலம் தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment