625.0.560.320.160.600.053.800.668.160.90யாழ்.கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் அமைந்துள்ள சமதான நீதவான் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (18) இரவு வேளையில் குறித்த வீட்டின்மீது மதுபானப் போத்தல்களால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இந்த சம்பவம் ஒரு மாத காலமாக இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் (21-09-2016) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இது தொடர்பில் பொலிஸாரினால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தாக்குதல் நடாத்தியவர்கள் தப்பிச்செல்வதாகவும் இந்த விடயத்தில் கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வீட்டின் உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment