23-1364011688-water-scarcity-600நாட்டில் அண்மையில் சில பகுதிகளில் வறட்சி காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தீமையிலும் ஒரு நல்லது உண்டு என்ற கூற்றுக்கு இணங்க நாட்டில் உப்பு உற்பத்தி வரலாறு காணத அளவிற்கு அதிகரித்துள்ளதாக இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் அயூப் கான் தெரிவித்துள்ளார்.

இந்த உப்பு உற்ப்பத்தியிற்கு பிரதான காரணம் வறட்சியே என தலைவர் அயூப் கான் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த காலக்கட்டத்தில் இலங்கை அதியுயுர் உப்பை உற்பத்தி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சில பகுதிகளில் காணப்பட்ட வறட்சியை தொடர்ந்து தற்போது மழை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment