IMG_9830கொட்டாவ பெலன்வத்த, கொல்கெட்டுவ பிரதேசத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களிடம் பிடிப்பட்ட ஹெரோயின் விற்பனையாளர்கள் இருவர்தப்பிச் சென்றுள்ளனர்.

ஒரு சந்தேகநபரை பிடித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் அவரது பையில் இருந்து 5 ஹெரோயின் பக்கட்டுக்களைகைப்பற்றியுள்ளார்.

சந்தேகநபருக்கு விலங்கு மாட்டுவதற்காக வீதியில் சென்ற ஒருவரின் உதவியை பெற்ற போதிலும் சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகஸ்தரின் கையை கடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து துப்பாக்கி பிரயோகம் செய்த போதிலும் துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் மீது படவில்லை.

இதேவேளை நடந்த இந்த குழப்பத்தில் மற்றைய சந்தேகநபரும் தப்பி ஓடியுள்ளார்.சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கண்டி வத்தேகெதர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

Comments

comments, Login your facebook to comment