imagesமுல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 10 குளங்களின் கீழ் இம்முறை காலபோக நெற்செய்கையில் 6,625 ஏக்கரில் நெற்செய்கை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனிக்குளம், ஐயன்கன்குளம், பழையமுறிகண்டிக்குளம், மருதங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், தென்னியங்குளம், கல்விளான்குளம், தேராங்கண்டல்குளம் மற்றும் மல்லாவிக்குளம் ஆகிய குளங்களுக்கான காலபோக நெற்செய்கைக் கூட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

காலபோக நெற்செய்கை கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விதைப்புக் காலமாக எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வரையில் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை புழுதி விதைப்புக்கான மழை பொழியாத நிலையில் காலபோக நெற்செய்கைக் கூட்டங்கள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment