625.0.560.320.160.600.053.800.668.160.90முல்லைத்தீவு மாவட்ட வர்த்தக நிலையங்களில் காணப்படும் பொருட்களின் உற்பத்தி, முடிவு திகதி மற்றும் பொருட்களின் தரம் போன்ற விடயங்களை பரிசோதிப்பதில் சுகாதார பிரிவு முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சில வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் சுகாதாரப் பிரிவின் பார்வை களஞ்சியம் நோக்கி செல்லவில்லை என்றும் அவர்களின் பரிசோதனை விற்பனை நிலையங்களில் மட்டுமே இருகின்றது என்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த தகவலை தொடர்ந்து ஊடகத்தின் பார்வை களஞ்சியங்கள் நோக்கி திரும்பியதை தொடர்ந்து, காலாவதியான பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment