53-1மன்னார் வலயக்கல்விப்பணிமனையின் முறைசாராக கல்வி பிரிவினால் நடாத்தப்பட்டு வந்த அழகுக்கலை மணப்பெண் அழங்கார பயிற்சி நெறியின் ஒப்பனை கண்காட்சி மற்றும்,சான்றிதல் வழங்கும் வைபவம் இன்று(21) வெள்ளிக்கிழமை காலை மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த ஒப்பனை கண்காட்சி மற்றும்,சான்றிதல் வழங்கும் நிகழ்வுக்கு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை,மன்னார் வலய கல்வி பணிமனையின் அதிகாரிகள் அழகுக்கலை மணப்பெண் அழங்கார பயிற்சி மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் வலயக்கல்விப்பணிமனையின் முறைசாராக கல்வி பிரிவினால் நடாத்தப்பட்டு வந்த அழகுக்கலை மணப்பெண் அழங்கார பயிற்சியின் ஒப்பனை கண்காட்சி மேடையேற்றப்பட்டதோடு,பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.52-751-8 53-1 54-1 55-1 56 57 58 59 60-7

Comments

comments, Login your facebook to comment