vinod-kidnap-killed-karpur-agwaa-murderகொழும்பின் புறநகர்ப் பகு­தி­யான தெஹி­வ­ளையில் வைத்து வெள்­ளை­வேனில் வந்­தோரால்  2008 ஆம் ஆண்டு கடத்­தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்­டுள்ள ஐந்து மாண­வர்­களும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் எவ்­வித தொடர்­பு­களையும் கொண்டிருக்­க­வில்லை என கடற்­படை புலனாய்வு  பிரிவின் சிப்­பா­யான அளுத் கெதர உபுல் பண்­டார நீதிமன்றில் சாட்­சி­ய­ம­ளித்தார்.

கடத்­தப்பட்டு காணாமல் போகச் செய்­யப்பட்­டுள்ள ஐந்து மாண­வர்­களில் மூவர் சார்பில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்யப்பட்­டுள்ள ஆட்­கொ­ணர்வு மனு மீதான விசா­ர­ணைகள் கொழும்பு பிர­தான நீதிவான் கிஹன் பில­பிட்­டிய முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­ கொள்ளப்பட்டபோதே சாட்­சி­ய­ம­ளித்த மேற்­படி கடற்­படை உத்­தி­யோ­கத்தர் இவ்வாறு கூறினார்.

குறித்த ஐந்து மாண­வர்­களும் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் எனக் கூறி கைது செய்­யப்பட்­ட­வர்கள் என்ற பெயரில் கடத்தி வரப்­பட்­டி­ருந்­த­தாகவும், அவர்­க­ளுக்கு தான் உணவு வழங்­கி­ய­தா­கவும் அவர்­க­ளுடன் உரை­யா­டி­ய­தா­கவும், அதன் போது தனது புல­னாய்வு அறிவின் ஊடாக அவர்­க­ளுக்கு புலி­க­ளுடன் எவ்­வித தொடர்பும் இல்லை என்­பதைப் புரிந்­து­கொன்­ட­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

Comments

comments, Login your facebook to comment