vinod-kidnap-killed-karpur-agwaa-murderயாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் 23.10.2016 மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் பழிவாங்கல் நடவடிக்கை அல்லவென பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிவில் உடை அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்ற அரசாங்க புலனாய்வு சேவை அதிகாரிகள் மீது சுன்னாகம் பகுதியில் வைத்து  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கும், யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கோபத்தில் இருந்தவர்களினால் மேற்கொள்ளப்பட்டதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது யாழ்ப்பாணம், சுன்னாகம் ஆடை கடையொன்றில் கொள்ளையடித்து விட்டு வாகன தகடின்றி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அங்கு அருகில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் அந்த இடத்திற்கு வந்துள்ள நிலையில் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான நிமல் பண்டார மற்றும் பீ.எஸ்.நவரத்ண ஆகிய இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குழுவொன்று உள்ளதாகவும், அவர்கள் தினமும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது. இன்நிலையில் 1,50,000 இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் உள்ள போதும் இவ்வாறான ரவுடி கும்பல் எவ்வித தடையும் இன்றில் செயற்படுவது எவ்வாறு என வடக்கு முதல்வர் கேள்வியெழுப்பியிருந்தார்.

சுன்னாகம் சம்பவத்தை தொடர்ந்து யாழில் எவ்வித குழப்பமும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment