யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு A9 வீதிக்கு குறுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குறித்த மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், யாழ். நகரில் அமைந்துள்ள மாவட்ட செயலக வாயில்களுக்கு முன்னால் அமர்ந்து அமைதியான முறையில் இந்த போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவிருந்த போதும் அரச நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நோக்கில் அரச செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

14573046_853758551427008_2671896826386246314_n 14581428_853758604760336_7720404873777260817_n 14670879_853758651426998_4291974018426868693_n 14718695_853758698093660_1025026979883777123_n 14718796_853758458093684_3842640464809838776_n 14725455_853758678093662_3793332436494497475_n

 

Comments

comments, Login your facebook to comment