625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)வெலிமடை கெப்பெடிபொல எரபெத்த ஆற்றில் குளிக்கச் சென்ற 16 வயது பாடசாலை மாணவன் ஒருவன், இன்று (24) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெப்பட்டிபொல மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயின்று வந்த, கெப்பட்டிபொல ஹிம்பிலியகொல்ல பிரதேசத்தை சேர்ந்த சீ.ஜ.மாரசிங்ஹ என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று நடைப்பெற்ற மேலதிக வகுப்பை முடித்துவிட்டு குறித்த ஆற்றிற்கு சக நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது இவ் இளைஞன் காணாமற் போயிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதேசவாசிகள் நேற்று முதல் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் பயனாக இன்றைய தினம் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 625.472.560.320.505.600.053.800.900.160.100

Comments

comments, Login your facebook to comment