625.0.560.320.160.600.053.800.668.160.90 (6)நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீடிரென தீ பற்றி எரிந்துள்ளதாக நானுஓயா பொரிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா எடின்புரோ பகுதியில் இவ்வாறு குறித்த பஸ் தீக்கிரையாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது

வழமை போல் பஸ் நானுஓயா நகரத்தில் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கும் பொலிஸார் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நகரத்தில் இருந்து சம்பவம் நடத்த இடத்திற்கு இனந் தெரியாதவர்களால் கொண்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பஸ் சாரதியை தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நுவரெலியா குற்ற பரிசீலனை பிரிவினரும், நானுஓயா பொலிஸாரும் மேலதிக விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6)

Comments

comments, Login your facebook to comment