கடந்த சில நாட்களாக கிழக்கு மத்திய வங்காள விரிகுடாப் பகுதியில் உருவாகியிருந்த தாழமுக்கமானது தற்போது வலுவடைந்துள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாழமுக்கம் தற்போது மணிக்கு 10 கிலோமீற்றர் வேகத்தில் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த தாழமுக்கமானது இலங்கையின் வடகிழக்காக 1400 கிலோமீற்றர் தூரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவின் போட் பலயர் (PORT BLAIR) இலிருந்து வடக்கு – வடகிழக்காக 520 கிலோமீற்றர் தூரத்திலும் யன்கொன் (YANGON) இலிருந்து மேற்கு – தென் மேற்காக 320 கிலோமீற்றர் தூரத்திலும் தற்போது காணப்படுகிறது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் சூறாவளியாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வடக்கு-வடகிழக்கு நோக்கி சில மணித்தியாலங்கள் நகர்ந்து பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி தனது நகரும் திசையைமாற்றி பின்னர் வடமேற்கு நோக்கி மீண்டும் தனது திசையைமாற்றி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது எதிர்வரும் 27ம் திகதி காலை வங்காளவிரிகுடாவின் வடமேற்குப் பகுதியை அடைந்து 28ம் திகதி இந்தியக் கரையை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இது ஒரிசாமா நிலத்தின் கரையை ஊடறுத்துசெல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.’

இதனால் இலங்கைக்கு பாரியளவில் பாதிப்புகள் எதுவுமில்லை. இருந்த போதிலும் இலங்கையின் தென்மேற்கு பிராந்தியங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் அதிகளவு மழை காணப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

க.சூரியகுமாரன் வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment