முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் முள்ளியவளை பிரதேச உப அலுவலக வளாகத்தில் இருந்து ஆபத்தான இரு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகார பணிமனையின் கட்டட அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று வருகின்றது.

இதன் போது மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையில் தொழிலாளர்களால் குறித்த வெடிபொருட்களை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக விசேட அதிரடி படையினருக்கு பொலிஸார் கொடுத்த தகவலுக்கமைய இந்த வெடிபொருட்கள் எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment