downloadயாழ்ப்பாணம் நோக்கி வந்த அரச பேருந்து ஒன்றின் மீது சற்று முன்னர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இனந்தெரியாத ஒரு கும்பல் ஊடாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

மேலும், அரச பேருந்தின் கண்ணாடி சேதமடைந்துள்ளதாகவும் இதனால் சற்று பதற்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், யாருக்கும் எந்ந பாதிப்பும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.

சம்பவ இடத்தில் குவிந்த யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளை, திருகோணமலை நோக்கி வந்த பேருந்து ஒன்றின் மீது கெப்பட்டிபொல பகுதியில் வைத்து சற்று முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment