மட்டக்களப்பு – கல்லடி பாலத்துக்கு முன்பாக இன்று காலை (27) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் இருந்து வந்த பொலிஸாரின் வாகனமும் இளைஞரின் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளதுடன் காயமடைந்த இளைஞன் மட்டக்களப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்லடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment