வெளிமாவட்ட தொழிலாளர்களின் வருகையால் நாயாறு கடற்றொழிலார்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக நாயாறு கிராமிய கடல்தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமது குடியிருப்பு துறையில் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்கள் தினமும் 350 படகுகளில் வந்து தொழில் செய்வதாகவும் 20 படகுகளில் தொழில் செய்வோர் தமது குடியிருப்பு கரையோரங்களில் தங்கிநின்று தொழிலில் ஈடுபடுவதாக குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாயாறு கடற்றொழிலுடன் தொடர்புடைய பல கூட்டங்களில் உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக நாயாறு குடியிருப்பு மக்கள் வாழ்வாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment