14650453_1500958089920847_1735783872467231796_n-1யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்தமை பெரும் சர்ச்சை நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் குறித்த மாணவர்கள் உயிரிழந்ததாக, பொலிஸார் ஏற்றுக்கொண்டுள்ளதுடன். அவர்களின் உறவினர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கொலைகளை திசை திருப்ப பல்வேறு கோணங்களில் தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

உயிரிழந்த மாணவர்களில் ஒருவர் மீதே துப்பாக்கி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊடக கற்கை பிரிவை சேர்ந்த சுலக்ஷன் என்பவர் மீதே துப்பாகி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

கொல்லப்பட்ட சுலக்ஷன் மீது கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும், அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிக்கா உடகமவின் ஆலோசனைக்கமைய விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த விசாரணைகளில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் தற்போது தகவல் கிடைத்துள்ளதாக அந்த தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

சுலக்ஷன் என்ற மாணவனுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் “ஆவா” என்ற குழுவினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அவர் உயிரிழக்கும் வரையிலும் பொலிஸார் அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்ற தகவல் குறித்து விசாரணைகளின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உடம்பில் துப்பாக்கி சூட்டு அடையாம் கண்டுபிடிக்கப்பட்ட மாணவர் சுலக்ஷன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பிரிவு மாணவராவார். யாழ்ப்பாணத்தில் விருது பெற்ற நடிகரான அவர் பிரதான கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் படத்தில் 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாண திரைப்படத்தில் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.

சுலக்ஷனின் சகோதரி ஒருவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், அவர் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முதல் நாள், வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம் என பாதுகாப்பு பிரிவு என கூறிக் கொள்ளும் குழுவொன்றினால் சுலக்ஷனுக்கு தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஒரு முறை பாதுகாப்பு பிரிவு என கூறிக் கொள்ளும் குழுவினரால் 2009ஆம் ஆண்டு காணாமல் போனதாக கூறப்படும் சுலக்ஷனின் சகோதரர் தொடர்பில் தகவல் கோரி அவரது வீட்டிற்கு சென்றுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவல்களின் உண்மை மற்றும் பொய் தொடர்பிலும், தற்போது வரையில் கிடைத்துள்ள மேலும் பல விசேட தகவல்கள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

மனித உரிமை ஆணைக்குழு சுலக்ஷனின் வீட்டிற்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment