கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் இன்று காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  முன்னெடுக்கப்படடது .

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக  அரசியல்  கைதிகள் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அரசியல்  கைதிகளை காலதாமதம் இன்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி  இந்த கையெழுத்து  திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக ஏற்பாட்டர்கள் தெரிவிக்கின்றனர்

வடமாகணத்தில் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி,ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றுவந்த நிலையில்,  இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.  ujkk unnamed-11

Comments

comments, Login your facebook to comment