news17 வயதான யுவதி ஒருவரை 40 வயது மதிக்கத்தக்க மந்திரவாதி ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் யுவதியின் பெற்றோர் நேற்றைய தினம் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயதான குறித்த யுவதி பொத்துவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

எனினும், இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட யுவதியின் பெற்றோர், யுவதியின் காதலை பிரிப்பதற்கு திமிலைத்தீவிலுள்ள மந்திரவாதி ஒருவரின் உதவியை நாடியுள்ளனர்.

இந்நிலையில், யுவதியின் காதலை பிரிப்பதற்கு பரிகாரங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்த மந்திரவாதி, நேற்றைய தினம் யுவதியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதன் போது யுவதியின் தாயார் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது, மந்திரவாதி குறித்த யுவதியினை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

comments, Login your facebook to comment