download_1போலி ஆவணங்களை பிரயோகித்து இலங்கைக்கு வருகைத்தர முயற்சித்த இலங்கை பிரஜை ஒருவர் இந்தியாவின் மதுரை பகுதியில் வைத்து நேற்றைய (27) தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இலங்கை பிரஜை 2008 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சென்று வசித்து வந்துள்ளார்

இதேவேளை நேற்றைய தினம் இலங்கை மிஹின் லங்கா விமானத்தில் இலங்கைக்கு பயணிக்க முயற்சித்த போதே குடிவரவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்து இந்தியாவில் வாழ்வதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment