imagesமுல்லைத்தீவு மாவட்டத்தில் மூவாயிரம் வரையான குடும்பங்கள் காணிகள் இல்லாத குடும்பங்களாக காணப்படுகின்றன என மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள்தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் துணுக்காய் மாந்தைகிழக்கு வெலிஓயா ஆகிய ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் நாற்பத்தி இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 569இற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வரும் நிலையில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் தமக்கான சொந்தக்காணிகள் இல்லாத நிலையில் அவர்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும்ஏனைய உதவித்திட்டங்களை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கான நிரந்தரக்காணிகளை வழங்குவதற்கு வனஇலாகா மற்றும் அது சார்ந்த திணைங்களங்கள் தாமதங்களையும் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றன என பல்வேறு தரப்புக்களாலும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் அண்மையில் தொடர்பு கொண்டு கேட்டபோது மாவட்டத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணிகளற்ற குடும்பங்களாக காணப்படுகின்றன என்றும் இவர்களுக்கு உரிய முறைப்படி காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத்தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment