batti01-300x169முல்லைத்தீவு துணுக்காய் ஐயன்கன்குளம் பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் இக்கிராமத்தில் தாங்கள் பெரும் அச்சத்துடன் வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஐயன்கன்குளம்,, பழைய முறிகண்டி, புத்துவெட்டுவான், தேறாங்கண்டல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் காட்டுயானைகளின் தொல்லை அதிகளவில் காணப்படுகின்றன.

இதனால் மேற்படி கிராமங்களில் வாழும் மக்கள் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக பகல் வேளைகளில் கூட இப்பகுதிகளில் காட்டுயானைகளில் அட்டகாசம் அதிகளவில் காணப்படுகின்றன.

நேற்று (29-10-2016) இரவு ஐயன்கன்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் பெருமளவான பயன்தருமரங்கள் அழித்துள்ளதுடன் ஊர் மனைக்குள் பெரும் அட்டகாசம் செய்துள்ளன.

பெரும் சத்திமிட்டு கலைத்த போதும் யானை போன பாடாகவில்லை என்றும் இதனால் இரவு வேளை முழுவதும் அச்சத்துடனேயே இருந்ததாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்னளர்.

தொடர்ந்தும் இப்பகுதியில் யானையின் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றன என்றும் இதற்கான நிரந்தரத் தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment