மட்டக்களப்பு முறக்கெட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில் இருந்து எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் முறக்கெட்டாஞ்சேனை மாரியம்மன் கோயிலுக்கு முன்னால் உள்ள வீடோன்றில் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து சில மனித எலும்பு துண்டுகள் வெளிவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பகுதி ஏற்கனவே இராணுவ முகாம் இருந்த பகுதியென்பதோடு அங்கு மேலும் பல எலும்புக் கூடுகள் இருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

1990ம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போன பலர் குறித்த இராணுவ முகாமிற்கே கொண்டுசெல்லப்பட்டு காணாமல் போனதாகவும் அவர்களது எலும்புக் கூடுகளாக இவை இருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனவே இது குறித்து உடனடியாக மட்டக்களப்பு உயார்நீதிமன்ற நீதியரசர் அவர்கள் கவனம் செலுத்தி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் பொதுமக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment