IMG_0062-600x4501968 ஆம் ஆண்டு இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தினால் ஒட்டுசுட்டானில் பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்ட்டது.  அன்றிலிருந்து நூற்றுக்கணக்கான பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பினூடான வாழ்வாதாரமாக விளங்கிவந்தது குறித்த ஓட்டுத் தொழிற்சாலை.

1990 களில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் கட்ட ஈழப் போர் காலப் பகுதியில் வடக்கின் ஏனைய கட்டமைப்புகளை போன்றே ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையும் ஆட்டம் கண்டது. அந்தக் காலப்பகுதியில் இந்நத் தொழிற்சாலை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 750 குடும்பங்கள் பயனடைந்து வந்ததாக சொல்லப்படுகின்றது.

யுத்தம் நிறைவடைந்த நிலையில், குறித்த பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு ஆறு வருடங்கள் கடந்துள்ளன. ஆனால் இதுவரை இவ் ஓட்டுத் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பல்வேறு கட்டுமானப் பணிகளும் வீடமைப்புத் திட்டங்களும் நடைபெற்று வருகின்ற நிலையில் அவற்றுக்கு தேவையான ஓடுகள் வெளி இடங்களில் இருந்தே கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில், முன்பு போன்று இயந்திரங்கள் மூலமாக இத்தொழிற்சாலையை இயக்கினால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கலாம்.  முல்லைத்தீவு மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு பேருதவியாக அமையும் என நம்பப்படுகின்றது.

எனவே இத்தொழிற்சாலையை விரைந்து இயங்குவதற்கு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முல்லைத்தீவு மக்கள் ஆதவனூடாக வினயமுடன் முன்வைக்கின்றனர்.

Comments

comments, Login your facebook to comment