625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)மட்டக்களப்பு – முறக்கெட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் இருந்து நேற்று முன் தினம் எலும்புத் துகள்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முறக்கெட்டாஞ்சேனை பிரதான வீதியில் அண்மித்த மக்கள் குடியிருப்பு மற்றும் பாடசாலை என்பவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும் முறக்கெட்டாஞ்சேனை இராணுவ முகாமின் சில பகுதிகள் மக்கள் தேவைக்காக கடந்த 2014ம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தன.

மேலும், சுமார் 78 குடும்பங்களுக்கு சொந்தமான வீடுகள் விடுவிக்கப்பட்டு அதற்கான வீட்டுத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள வானதி உதயகுமார்(50வயது) என்பவரின் காணியில் மலசலகூடம் அமைப்பதற்கு வெட்டப்பட்ட குழியில் இருந்தே எலும்புத் துகள்கள் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தமது வீடு 2014ஆம் ஆண்டு 7ஆம் மாதம் விடுவிக்கப்பட்டு இந்த வருடமே தங்களுக்கான வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக வானதி உதயகுமார் கூறியுள்ளார்.

தாங்கள் விட்டுச்செல்லும் போது தங்களது காணியில் மரம் அறுப்பதற்காக பெரிய குழியொன்று இருந்ததாகவும் 26 வருடங்களுக்கு முன்னர் அந்த குழி இருந்த இடத்தில் இருந்தே எழும்புத்துண்டுகள் வெளிவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த எழும்புத் துண்டுகள் யாருடையது எந்தக்காலத்திற்கு உரியது என்பதை பொலிஸாரே விசாரணை செய்து சொல்ல வேண்டும் என்று வானதி உதயகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போன பலர் இராணுவ முகாமிற்கே கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனதாகவும் அவர்களது எலும்புக் கூடுகளின் துண்டுகளாக இவை இருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment