14875411_1179743165472540_1188371944_nயாழ்ப்பாணம் தனியார்  பேருந்து நிலையத்திற்கும்,யாழ் .போதனா வைத்தியசாலையின்பின்புறத்திற்கும் இடையே  உள்ள மின்சார நிலைய வீதியில் மூன்று நாட்கள் ஆகியும்  குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரும் அசௌகரிய ங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதிகமாக மக்கள் நடமாட்டம் உள்ள குறித்த  வீதியில் ,வைக்கப்பட்டுள்ள  குப்பை  கூடைகள்  நிரம்பியும் அதனை சுற்றி  உள்ள இட த்திலும் அதிகமான  குப்பைகளும் காணப்படுகின்றன.

மேலும்  குறித்த இடத்தில் பயணிகள்  நிழல்  குடையும் காணப்ப டுகின்றது,எனினும் அவ் நிழல் குடையினை பயணிகள் பயன் படுத்தாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

குறித்த  இடத்தில் உள்ள குப்பைகளினால் வெளிவரும் துர்நாற்றமே இதற்கு காரணம்  என  அவர்கள்  தெரிவிக்கின்றனர்.மேலும் இதில் அதிகளவான பொலித்தீன் குப்பைகள் காணப்படுவதால் தற்போது  இடையிடையே பெய்யும் மழையால் நீர் தேங்கி நுளம்பு கள் பெருகும் அபாயம் உள்ளதாக மக்கள்  தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த குப்பைகளை உரிய  முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை  மக்கள்  கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment