625.500.560.350.160.300.053.800.900.160.90யாழ். நல்லூரில் சமீபநாட்களாக வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் இரவு வேளைகளில் நடமாடி திரிவதை அவதானிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலங்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள நிலையில் நல்லூர் பருத்தித்துறை வீதியில் வாள்களுடன் இளைஞர்கள் நடமாடி வருகின்றனர்.

இவர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றமையால் அத்தியாவசிய தேவைக்காக கூட தமது பிள்ளைகளை வெளியில் அனுமதிப்பதில்லை என அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்தார்.

பெருமளவில் இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் புலனாய்வாளர்கள், இராணுவ புலனாய்வாளர்கள் பெரு மளவில் கடமையில் இருந்தும் துணிகரமாய் வாள் வெட்டு கும்பல்கள் சுதந்திரமாக உலாவுவது எப்படி எனவும் மக்கள் கேள்வி யெழுப்பியுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment