625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)யாழ். கோண்டாவில் பகுதியில் இன்று இரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகில் உள்ள சிறிய கடைக்குள் புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது கடை உரிமையாளர் தன்னை பாதுகாத்து கொண்ட நிலையில் காயமின்றி தப்பிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த தாக்குதலின் போது கடையில் இருந்த கண்ணாடிகளை தாக்குதல்தாரிகள் அடித்து நொறுக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தாக்குதலை மேற்கொண்ட மூவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும், மூவரும் முகங்களுக்கு கறுப்பு நிறத்திலான துணி கட்டி இருந்ததாகவும், கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகள் தலைதூக்கிய நிலையில் ஒருவித பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆவா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பாதாள குழுவினை குறிவைத்து பொலிஸ் விஷேட படையினர் முடக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment