யாழ்.பிறவுண் வீதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முயன்ற இளைஞன் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் உள்ள வீடொன்றின் மேல் ஏறி நின்ற நிலையில் அயல் விட்டார் இதனை பார்த்து வீட்டாருக்கு கூறியுள்ளனர்.

இதனையடுத்து அயலில் உள்ளவர்களும் சேர்ந்து சந்தேகநபரை சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது குறித்த நபருடன் வந்த மேலும் 3 பேர் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மடக்கி பிடிக்கப்பட்ட நபரை யாழ்.பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். குறித்த நபர் யாழ். கொட்டடி பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)_1

Comments

comments, Login your facebook to comment