625.500.560.350.160.300.053.800.900.160.90அக்குரன பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில் நகைகள் உள்ளடங்கிய பெட்டி ஒன்று திருடப்பட்டுள்ளதாக நகை கடை உரிமையாளர் அலவத்துக்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும், குறித்த கடையில் உள்ள சீ.சி.டி.வி பதிவுகளை வைத்து பார்க்கும் போது நகைகள் திருடிய பெண்ணின் ஐந்து வயது குழந்தையே நகை பெட்டியை எடுத்து கடையில் இருந்து வெளியேறும் போது வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெட்டியில் 10 bracelets இருந்ததாகவும் அதன் பெறுமதி 4 இலட்சத்து 16 ஆயிரம் ரூபா பெறுமதியுடையது என உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இரண்டு பெண்கள் இரண்டு குழந்தைகளுடன் கடைக்கு வருகை தந்தார்கள் என்றும் இரண்டு குழந்தைகளினதும் வயதுகள் 2 மற்றும் 5 ஆக இருக்கும் என்றும், நகைகளை பார்வையிட்ட பெண்கள் இந்த நகைகளை வாங்குவதற்கு தங்களிடம் போதியளவு பணம் இல்லை எனவும் தெரிவித்தார்கள் என நகை கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

இதன் பின்னர்,சீ.சி.டி.வி பதிவுகளை வைத்து பார்த்த போதே இவர்களுக்கு ஐந்து வயது குழந்தை நகை பெட்டியை திருடி ஒரு பெண்ணிடம் வழங்கிய சம்பவம் தெரிய வந்துள்ளதாகவும் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கைகளை அலவத்துக்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment