625.500.560.350.160.300.053.800.900.160.90யாழ். புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று (01) வித்தியாவின் படுகொலை வழக்கானது எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும் குறித்த மாணவியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இதனடிப்படையில் குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, யாழில் அண்மையில் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை சம்பவங்களுக்கு நீதி கோரி பல்வேறு நடவடிக்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும், யாழில் இடம்பெற்று வரும் இது போன்ற படுகொலை சம்பவங்களுக்கு இது வரையில் உரிய தீர்வு கிடைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment