imagesமுல்லைத்தீவு மாங்குளம் ஓலுமடுப்பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்த சந்தேக நபரிடமிருந்து 65 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதி மன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment