625.500.560.350.160.300.053.800.900.160.90 (2)முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலக கலாச்சார விழா நேற்று (01) முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள கலை கலாச்சார விழுமியங்களை எடுத்து காட்டும் அம்சமாகவே இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிகழ்வின் போது எதிர்கால சந்ததியினர் பயன்படுத்தும் வகையில் முல்லைத்தீவு பிரதேசத்தில் காணப்படும் சிறப்புக் கலைகள் மற்றும் வரலாற்று சின்னங்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் குறித்த கலாச்சார விழாவில் சிலம்போசை என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இறுவெட்டுகளும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தொடந்து மூத்த கலைஞர்களும் இளைய தலைமுறை கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாரம்பரிய கலை வரலாற்றை உள்ளடக்கிய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மற்றும் .பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன் ,சாந்தி சிறிஸ்கந்தராசா, செல்வம் அடைக்களநாதன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க, அதிபர் அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment