im-sorryகடந்த ஞாயிற்றுக்கிழமை வேப்பங்குளம் சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமியோருவர் தப்பியோடியதாக( கொடுமைப்படுத்துவதாக) செய்தி வெளியீட்டிருந்தோம் .இவ் செய்தி தவறானது என பொதுமன்னிப்பு கோருகின்றோம்.

சிறுவர்களை தனது மகள் போல் பாராமரித்து வரும் இந்த தாய் ( சாமி அம்மா) கடந்த 15வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வருகின்றார்.

இவ் விடயம் தொடர்பாக சிறுமியிடம் தொடர்பு கொண்ட போது, தன்னை அவர்கள் கொடுமைப்படுத்தவில்லை எனவும் தனது மகளை போல் தன்னை பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அன்பத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு,

எமது வேப்பங்குளம் இந்து அன்பக சிறுவர் இல்லம் தொடர்பாக 30.10.2016 அன்று உண்மைக்கு மாறாக இணையத்தளம், பத்திரிகைகள் மற்றும் முகநூல்களில் செய்தி வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

மேற்படி முகவரியில் இயங்கிவரும் எமது இல்லமானது 1997 ஆம் ஆண்டு 12 பிள்ளைகளுடன் எமது பிரதம குருவாகிய ஸ்ரீலஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு சுவாமி சமாதி அடைந்தபின்பு நான் எனது பாதுகாப்பின் கீழ் 100 க்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை வழங்கி வருகின்றேன். கல்வி கற்பதற்காக வஃசைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வஃநெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம், ஊ.ஊவு.ஆ.ளு ஆகிய பாடசாலைகளுக்கு அனுப்பப்படுவதுடன் மேலதிக கல்வி கற்கபதற்குரிய வசதிகளும் வழங்கப்பட்டுவருகின்றன. இல்லத்தில் வளரும் பிள்ளை ஒருவர் பல்லகலைக்கழகம் சென்று பட்டம் பெற்று தற்பொழுது அரச ஊழியராக கடமையாற்றுகின்றார், இங்கு வாழும் பிள்ளைகள் கலைகலாச்சார நிகழ்வுகள் பலவற்றில் பங்கு பற்றி தேசிய, மாகாண, மாவட்ட மட்டங்களிலும் வெற்றி பெற்று மிகவும் திறமையுள்ளவர்களாகவும் திகழ்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர்களுக்கு பூப்புனித நீராட்டுவிழா, திருமணம் மற்றும் பல்வேறு விதமான நிகழ்வுகளையும் செய்து வருகின்றேன் சிறுவர்தினம் இதில் குறிப்பிடத்தக்கது.;. நாட்டில் பலவிதமான இன்னல்களாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை; நீதிமன்றகட்டளையினாலும், சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தினராலும் மாவட்ட சிறுவர் பொலீஸ் திணைக்களத்தினராலும் எம்மிடம் இணைக்கப்பட்டுள்ளனர். நான் அவர்களுக்கு தாய்க்குத்தாயாக இருந்து எனதுபிள்ளைகள் போலவே பராமரித்து வருகின்றேன். நான் வளர்த்து வரும் பிள்ளைகளுக்கு எந்த விதமான கொடுமைகளையும் நான் செய்யவில்லை. எமது இல்லத்தில் நிர்வாகசபை உறுப்பினர்கள், ஆயுட்கால உறுப்பினர்கள் என 25 பேர் கொண்ட நிர்வாகசபை உள்ளது. தற்பொழுது எனது பாதுகாப்பில் 58 பிள்ளைகளை பராமரித்து வருகின்றேன், 10 ஊழியர்களும் கடமையாற்றுகிறார்கள்.

இவ்இல்லத்தில் இரவு பகல்பாராது பிள்ளைகளுடன் இருந்து தாயாக எனது சேவையை செய்து வருகின்றேன். எனது அனைத்து சகோதரர்களும் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்கள். எனக்கு தாய் தந்தை இல்லை. இப் புனிதமான சேவைக்காக நான் என்னை அர்ப்பணித்துள்ளேன். என்னுடைய சொந்தப் பணத்தில் தான் என்னுடைய செலவை செய்து வருகின்றேன். இவ் இல்லத்தில் 19 வருடங்களாக சேவை செய்கின்றேன். எனது இல்லத்தின் அருகில் பிள்ளைகளு;க்காக அமைக்கப்பட்ட காளி அம்மன் ஆலயம் ஒன்றும் உள்ளது. அவ் ஆலயம் தற்பொழுது மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஆலயமாக மாறியுள்ளது, அக் கோயிலை பொறுப்பேற்று அங்கு பூசகராகவும், கோயில் திருப்பணிகளையும் செய்து வருகின்றேன்.

இங்குவாழும் பிள்ளைகள் பல்வேறு துன்பங்களால் பாதிக்கப்பட்ட காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் அவர்களையும் அரவணைத்து அன்பு காட்டி வளர்த்து வருகின்றேன 30.10.2016 அன்று எமது இல்லத்தில் இருந்து வெளியே சென்ற பிள்ளை பல தடவைகள் பல இல்லங்களில் அவர்களால் பராமரிக்கமுடியாது என்று இறுதியாக எம்மிடம் நீதிமன்ற கட்டளை ஊடாக மாவட்ட சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தினரால் எம்மிடம் இணைக்கப்பட்டவர். இவர் இல்லத்திற்கு வெளியே செல்வது இயல்பான செயல் இவ்வாறு போகும் போது அவரை சிறுவர் நன்னடத்தை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வருவோம். பின்னர் மீண்டும் எமது இல்லத்திற்கே அனுப்பி வைப்பார்கள் அத்துடன் இவர் வவுனியா பொது வைத்தியசாலையில் உளநல வைத்தியரிடமும் ஆலோசனை பெற்றுள்ளார். சென்ற வருடம் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு இல்லத்திலும் 3 மாதங்கள் இணைக்கப்பட்டடு மீண்டும் என்னுடன் வரப்போவதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்தார். நான் பிள்ளையிடம் கூறினேன் நீர் பலவிதமான இன்னல்களை எனது இல்லத்திலுள்ள குழந்தைகளுக்கும், எனக்கும் ஏற்படுத்திய காரணத்தால் தான் உம்மை பாதுகாப்பு இல்லத்தில் இணைத்தவர்கள் என்று, அதற்கு அம்மா நான் இனி குழப்படி செய்யமாட்டேன், பிள்ளைகளுடன் சண்டை போடமாட்டேன் நல்ல பிள்ளையாக இருப்பேன் என கூறி, நான் படிக்க வேண்டும் நான் உங்களிடம் வந்து படிக்கப்போகிறேன் அம்மா என்று கேட்டார்.
பின்னர் மாவட்ட சிறுவர் நன்னடத்தை அலுவர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிள்ளை உங்களிடம் வரப்போவதாக கூறுகிறார் என்ன செய்வது என என்னிடம் கேட்ட போது நான் கூறினேன் பிள்ளையின் எதிர்காலம் சீரழியக் கூடாது பிள்ளையை நான் பாரம் எடுத்து பாடசாலை அனுப்புகிறேன் என்று கூறியபின்னர் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தரால் நீதிமன்றத்தின் ஊடாக எம்மிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டார். என்னுடைய இளகிய மனதின் காரணமாக அந்தப்பிள்ளையை பொறுப்பேற்றதுடன் பிள்ளையை பாடசாலையில் மீண்டும் கல்வி பயில்வதற்கான ஒழுங்குகளை செய்து கொடுத்துள்ளேன்.

எனது இல்லத்தில் போதிய வருமானம் இல்லாத போதும், இறைவனின் திருவருளால் நான் இச் சேவையை இறைபணி என்றே செய்து வருகின்றேன். லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளை ஊடாக மாதாந்த செலவுக்காக ஒரு பிள்ளைக்கு இலங்கைப் பணம் மூவாயிரம் ரூபா வீதம் நாற்பது பிள்ளைகளுக்கு அனுப்பப்படுகின்றது.
எமது இல்லத்தில் ஒவ்வொரு மாதமும் பெருந்தொகையான பணம் செலவாகின்றது. இறந்தவர்களின் நினைவாகவும், பிறந்தநாள் மற்றும் திருமண நாள் என்பவற்றிற்கு பொதுமக்களால் அன்பளிப்பாக வழங்கப்படுவதை பெற்றே பராமரித்து வருகின்றோம். சமூகசேவை திணைக்களத்தினால் மாதாந்த உதவிப்பணமாக ஒரு பிள்ளைக்கு மாதாந்தம் 250 ரூபா வீதம் 58 பிள்ளைகளுக்கு வழங்கப்படுவதுடன், வருடம் ஒருமுறை இந்து கலாச்சார திணைக்களத்தினரால் சிறு தொகை பணம் பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்களுக்காக வழங்கப்படுகிறது.
பிள்ளைகள் பாடசாலைக்கு நடந்து போக கூடாது என்பதை கருத்தில் கொண்டு 34 லட்சம் பெறுமதியான பஸ் ஒன்றினை 10 லட்சம் ரூபா கொடுத்து மிகுதி 24 லட்சம் ரூபாவிற்கு லீசிங் அடிப்படையில் மாதாந்தம் 58000 ரூபா செலுத்தி வருகின்றோம். இவ்வாறுபல துன்ப, துயரங்களுக்கு மத்தியிலும் இல்லத்தை நடாத்தி வருகின்றோம். நாம் பிள்ளைகளுக்கு நல்ல பல காரியங்கள், நிகழ்வுகளை நடாத்திய போது ஊடகவியாளர்களுக்கு தெரிவித்தும் அவர்கள் யாரும் வந்ததில்லை.

குறித்த தினத்தில் குறிப்பிட்ட சிறுமி மற்ற சிறுமிகளுடன் சண்டை பிடித்ததுடன் ஒரு சிறுமிக்கு அடிப்பதற்பாக துரத்தியுள்ளார் அப்பிள்ளை என்னிடம் ஓடி வந்தபோது நான் அடிப்பதை தடுத்து அவ்வாறு அடித்தால் பொலிசாரிடம் ஒப்படைப்பேன் என்று கூறி கோயிலுக்கு சென்று விட்டேன். பின்னர் ஊழியர்களுக்கு தகாத வார்த்தைகளால் பேசியதுடன் மீண்டும் பிள்ளைகளுடன் சண்டை பிடித்து விட்டு இல்லத்திற்கு வெளியே செல்ல முயன்றுள்ளார். சிறுவர் நன்னடத்தை அலுவலகத்திற்கு போறன் என்று கூறிவிட்டு ஊழியர்களும், காவலாளியும் தடுக்க அத்துமீறி வெளியே சென்று உள்ளார். இருந்தும் நாம் பின்னால் சென்று சிறிது நேரத்திற்குள் பிள்ளளையை அழைத்து வந்து விட்டோம்.

பிள்ளை இல்லத்திற்கு வந்து 2மணிநேரத்திற்குள் பழையநிலைக்கு திரும்பியதுடன் மறுநாள் வழமை போன்று பாடசாலைக்கும் சென்று விட்டார்.. வழமையாக இந்த செயலை செய்யும் பிள்ளை வெளியே செல்வதைக் கண்டு கிளிநொச்சி இணையத்தள ஊடகவியலாளர் தான் வவுனியா இணையத்தளத்தில் ஊடகவியலாளர் என்று கூறி, ஏன் பிள்ளை வெளியே சென்றுள்ளார் பிள்ளையை சந்திக்க வேண்டும் என எம்மிடம் கேட்ட போது நான் நடந்த சம்பவத்ததை கூறியதுடன், இன்று ஞாயிற்றுக்கிழமை நாளை பிள்ளை சிறுவர் நன்னிடத்தை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தேன்.

அதன்பின்னர் எமது இல்லத்தின் வளாக வாசலில் போடப்பட்டுள்ள பெயர்ப்பலகையையும் புகைப்படம் எடுத்ததுடன் பின்னர் கொடுமை காரணமாக பிள்ளை சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமி தப்பியோட்டம் என்றும் நான் பிள்ளையை பொலிசாரிடம் ஒப்படைப்பேன் என்று கூறியதையும் தன்சொந்ந இணையத்தளமான கிளிநொச்சி இணையத்தளத்தில் பிரசுரித்த பின்னர் ஏனைய இணையத்தளங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் இப் பொய்யான செய்தியை பிரசுரித்துள்ளனர்.
இதனால் இவர் எமக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் பிள்ளைகளுடைய வாழ்வாதாரத்திற்குரிய உதவிகளுக்கும் இழப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரை பொலிஸ் நிலையம் அழைத்து அவர் செய்தது பிழை என கூறி மன்னிப்புக் கேட்டு அவர் ஊடாகவே அவருடைய இணையத்தளத்தில் பிரசுரிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் பட்டசத்தில் இவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்வோம். அத்துடன் சிறுவர் பெண்கள் பிரிவு பொலீஸ் உத்தியோகத்தர்களும், மாவட்ட சிறுவர்நன்னடத்தை உத்தியோகத்தர்களும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் வாரம் ஒருமுறை வந்து பிள்ளைகளுடன் கலந்துரையாடி பிள்ளைகளின் நிலமை பற்றி அறிந்து செல்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.