போதைக்கு அடிமையாகிய ஒருவர், போதைப்பொருள் வாங்குவதற்காக தன்னுடைய சிறுநீரகத்தை விற்பனை செய்த சந்தர்ப்பத்தில் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90காலி – தேவத்த பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே, போதைப்பொருள் வாங்குவதற்காக தன்னுடைய சிறுநீரகத்தை 5 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.

குறித்த நபர் சிறுநீரக்ததை விற்பனை செய்த பின்னர் ஹெரோயின் வாங்குவதற்காக கொழும்பிற்குச் சென்று ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை செலவழித்துள்ளார் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை கைது செய்யும் சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து 100 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை காலி நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும், நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்றுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பலர் இது குறித்து விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment