625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

திருகோணமலை,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பொலிஸ் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டின் நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் மக்கள் பெருமிதம் அடைகின்றனர் என்றும், தற்போது தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சட்டம் மற்றும் ஒழுங்குகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும்,முறைப்பாடுகளை தமிழில் பதிவு செய்வதற்கும் தமிழ் மொழியில் விசாரணைகள் மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

குற்றச் செயல்களை தடுப்பதே பொலிஸ் அதிகாரிகளின் நோக்கம் என்றும், பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 467 இலிருந்து 600 ஆக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment