வவுனியாவில் நேற்று(02.11.2016) கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மகனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

நேற்று வவுனியா ஓமந்தை புதிய வேலன்சின்னக்குளம் பகுதியிலில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மூன்று வயது மகன் ஆகியோரின் சடலங்கள் இன்று (03.11.2016) காலை அப்பகுதியிலுள்ள கிணற்றுக்குள் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது.

நேற்று கணவனுடன் எற்பட்ட குடும்பத்தகறாறு காரணமாக வீட்டிலிருந்து வெளியேறிய தாய் மற்றும் தனது மூன்று வயது மகனுடன் லீசிங் நிறுவனத்திற்கு பணம் செலுத்தவதற்கு செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார்.

எனினும் மாலை வரை வீடு திரும்பாததையடுத்து இன்று காலை அயலிலுள்ள கிணற்றுக்குள் சென்று பார்த்தபோது தாய் மற்றும் மூன்று வயது மகன் இருவரும் சடலமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்த சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.DSC_0066DSC_0070 DSC_0075 DSC_0078 DSC_0079 DSC_0080 DSC_0082 DSC_0083 DSC_0088

Comments

comments, Login your facebook to comment