625.0.560.320.160.600.053.800.668.160.90_1சிங்கள இசையுலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் இசையமைப்பாளரும் பாடகருமான மறைந்த கலாநிதி பண்டித் அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 10 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்போது அவரது உடல் அடங்கிய பேழையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாங்கி வந்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதி ஒருவரால் கலைஞர் ஒருவரின் உடல் இவ்வாறு தாங்கி வரப்பட்டமை வரலாற்றிலே இது முதன் முறையாகும்.

குறித்த ஊர்வலத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, கயந்த கருணாதிலக உள்ளிட்ட அரச தலைவர்களும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதேவேளை, அன்னாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும், அனைத்து வீடுகளிலும் வெள்ளைக் கொடியை தொங்க விடுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற பிரபல மூத்த சிங்களமொழிப் பாடகர் டபிள்யூ.டி. அமரதேவவின் இறுதிக் கிரியைகள் நாளை சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பூரண அரச மரியாதையுடன் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரணித்தவர் உடலை சுமந்த வரலாற்று சாதனையை ஜனாதிபதி மைத்திரி தனதாக்கி கொண்டுள்ளார்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90_1

Comments

comments, Login your facebook to comment