625.0.560.320.160.600.053.800.668.160.90பொகவந்தலாவ – டின்சின் தோட்டத்தில் மகனும் மருமகளும் சேர்ந்து தாய் ஒருவரை செருப்பால் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் நேற்று(03) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டின்சின் தோட்டத்தைச் சேர்ந்த 70வயது ராசம்மா என்ற பெண்ணே இவ்வாறு துன்புறுத்தப்பட்டு வீட்டாரினால் வெளியேற்றப்பட்டதாக டின்சின் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாய்க்கு கடந்த இரண்டு நாட்களாக உண்பதற்கு உணவு கூட இல்லாமல் டின்சின் தோட்ட பிரதான பால் சேகரிக்கும் நிலையத்தில் தங்கியிருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை குறித்த பெண்ணிற்கு அயலவர்களாலேயே உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இந்த சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவ டின்சின் பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு துன்புறுத்தப்பட்ட பெண்ணை முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸாரின் ஊடாக மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

இது போன்று தாய்மார்களை துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டும் மகன்மார்களுக்கு எதிராக சம்பந்த பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேசமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment