23dp11முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்ற நிலையில், இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு குறித்த பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டுயானைகள் மக்களின் குடியிருப்பு பகதிக்குள் நுழைந்து கட்டடங்களையும் பல வகையான பயிர் வகைகயையும் நாசம் செய்து வருவதுடன் உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் புத்துவெட்டுவான், ஐயன்குளம், சிராட்டிகுளம், பளம்பாசி, தண்டுவான், கற்சிலைமடு, முத்தையன்கட்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் யானைப்பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றது

இதனால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதோடு, தென்னை வாழை, நெல் போன்ற பயிர்கள் அதிகம் அழிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

தென் இலங்கையில் அட்காசம் செய்யும் யானைகளை கொண்டுவந்து தங்கள் பிரதேசங்களில் இறக்கி விடுவாதாக குற்றம் சுமத்தும் பிரதேசமக்கள், இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment