school-4தந்தைக்கு எதிராக பாடசாலை சீருடையுடன் மகன் ஒருவன் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீண்டகாலமாக தொடர்ந்து தன்னையும் தன் இரண்டு சகோதரிகள் மற்றும் தாயையும் மிக கொடூரமான முறையில் தாக்குகின்றார் என குறித்த சிறுவன் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சிறுவன் 12 வயதுடையவர் எனவும்,முறைப்பாடை பதிவு செய்யும் போது குறித்த சிறுவன் அழுது கொண்டே முறைப்பாடு செய்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காக குறித்த பெற்றோர்களை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment