625.500.560.350.160.300.053.800.900.160.90மட்டக்களப்பு தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட பிரதேசத்தில் வசிக்கும்குருகுலசிங்கம் கஜேந்திரன்(12) எனும் சிறுவன் இன்று காலை பரிதாபகரமாகஉயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குறித்த சிறுவன் தன் வீட்டின் மேல் பகுதியில் தான் வளர்ந்து வந்த ஒரு சோடி புறா கூட்டினுள் புறாவிற்கு தீன் வைப்பதற்காக கூரைப்பகுதிக்கு ஏற முயன்ற வேளையில் வழுக்கியமையால் விழுந்துள்ளார்.

பின்னர் சிறுவன் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் இடைநடுவில் அவர் உயிரிழந்துள்ளார். சிறுவனுடைய சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுவன் பாடசாலை கல்வியை இடை நடுவில் கைவிட்ட வறுமைமிகுந்த குடும்பத்தை சேர்ந்தவர் எனவும் இவருடைய தந்தை அன்றாட குடும்பச் செலவுக்காக கூலித்தொழிலில் ஈடுபட்டு வருகின்ற ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment