625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பகுதியில் நேற்று (05) நள்ளிரவு 12.00 மணியளவில் பாரவூர்த்தி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறி மீதும், கார் மீதும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் மூன்று வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளது.

எனினும் பாரவூர்த்தியின் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியினை நோக்கி சென்றுகொண்டிருந்த லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளாகிய நேரத்தில் மோதுண்ட இரு வாகனங்களிலும் எவரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

மேலும், சம்பவம் தொடர்பாக பாரவூர்த்தியின் சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment