625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)பொதுமக்களின் தகவலுக்கமைய ஹட்டன் நகரிலுள்ள வர்த்தகநிலையமொன்றிலிருந்து ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

ஹட்டன் டிக்கோயா நகரசபை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்தே ஹட்டன் பொலிஸாரினால் இன்று(06) சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வழக்கொன்று தொடரப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவிற்கமைய மூடப்பட்டிருந்த குறித்த கடையிலிருந்தே மேற்படி சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் ஹட்டன் நகரில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்தவர் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் ஹட்டன் மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டப்பின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசலைக்கு சடலத்தை அனுப்பிவைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளனர்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment