24940881Murderபயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் யாழ்.கொக்குவில், திருநெல்வேலி மற்றும் சில்லாலைப் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நேற்றுச் சனிக்கிழமை(05) கைது செய்யப்பட்டுள்ளதாகக் கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் கபில்நாத், திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கெங்காதரன் பிருந்தாபன், சில்லாலைப்பகுதியை சேர்ந்த அலெக்ஸ் அரவிந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

சீருடை மற்றும் சிவில் உடையில் வந்தவர்களே கைது செய்து சென்றுள்ளதாகவும், கைதுக்கான காரணங்கள் எவையும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை எனவும் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, யாழ். குடாநாட்டில் இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள், பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டமை போன்ற சம்பவங்களின் எதிரொலியாகக் குறித்த கைதுகள் இடம்பெற்றிருக்கலாம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.

Comments

comments, Login your facebook to comment